வேட்டைக்காரன் ***SPECIAL***

விஜய்னாலே வில்லங்கம்னு ஆயிப்போச்சி. அது என்னமோ தெரிய பீல்டுல இவ்வள‌வு நடிகர்கள் இருக்கும் போது விஜய்க்கு மட்டும் தான் ஸ்பெசல் கவனிப்பு ஆராதனை நடக்கிறது. இத்தனைக்கும் விஜய்க்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அதே நேரம் கொடி புடிச்சி கோசம் போடும் அதே ரசிகர்களே படம் நல்லா இல்லாட்டி டாஸ்மாக்ல சரக்க போட்டுட்டு சகட்டுமேனிக்கு திட்றதும் உண்டு. இந்த சிறப்பு விஜய்க்கு மட்டும் தான் அமைந்திருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

கில்லி படத்த ஹிட் குடுத்ததிலிருந்து அவர் தன் பாணியை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை. மசாலாப்புளி பேரரசு இயக்கத்தில் திருப்பாச்சியும், சிவகாசியும் நல்லா போனாலும் போனது அதிலிருந்து விஜய் அதே ரவுடி பாணி வேடங்களை ஏற்க ஆரம்பித்தார். விஜய்யைப் போலவே உங்களுக்கும் ஹிட் தர்றேன்னு கூட்டிகிட்டு போயி அஜீத்தை அதள பாதாளக் கிணற்றில் தள்ளி விட்ட பேரரசு, மீண்டும் தான் எழுதி வைத்திருந்த இன்னொரு மொக்கை கதைக்கு மறுபடியும் விஜய்யை அனுக அத்தோடு அவரை வெளியே தள்ளி கதவைச் சாத்திவிட்டார் விஜய்.

உடைந்து தொங்கிய மார்க்கெட்டை மீண்டும் துக்கி நிலை நிறுத்த அவரது பழைய ஐடியாவான மகேஷ்பாபு படங்களை ரீமேக் செய்ய முடிவு செய்தார். (நல்ல வேலை நந்துவும் குமரனும் பிழைத்தது) அந்த நேரத்தில் தெலுங்கில் வெளியாகி சக்கை போடு போட்ட போக்கிரி படத்தை டைட்டிலை கூட மாற்றாமல் அப்படியே தமிழில் ஜெராக்ஸ் எடுத்தார் பிரபுதேவா. ஏற்கனவே கேசினோவில்(chennai theatre telugu film releases) போக்கிரி படத் தெலுங்கு பதிப்பைப் பார்த்துவிட்ட சினிமா விளிம்பிகள் தேவியில் போக்கிரியை வேண்டா வெருப்பாக பார்க்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். காசைக் குடுத்துட்டமே! சரி பரவாயில்ல ஏசியிலயாவது உக்காந்துட்டுப் போவோம்னு முடிவு செஞ்சாங்க ரசிகரல்லாத பொதுமக்கள்.

அதுவும் வேலைக்காவாமல் போகவே மறுபடியும் தரணி தான் லாயக்கு என மறுபடியும் தரணியிடம் தூது விட ஆரம்பித்தார். அவரும் வாய்ப்பு வந்தால் பார்க்கலாம் என கூறியிருந்த நேரத்தில் தான் அதிர்ஷ்ட லட்சுமி கதவைத் தட்டி உதயநிதியை ஒன்பது மேகங்களோடு அனுப்பிவைத்தாள். குருவி தௌஸன்ட் வாலா சரவெடி என்றார்கள். ஆனால் அதுவும் நமுத்துபோன ஊசி வெடியானது. ஆனால் மேற்கண்ட எல்லாப் படங்களும் நூறு நாள் ஹிட் என அவர்கள் தங்கள் சொந்தக் காசை வைத்து போஸ்டர் ஒட்டியும் பேப்பர்களில் விளம்பரம் செய்ததும் தான் சிறந்தக் காமெடி. அது சரி தியேட்டர் நம்மளுதா இருந்தா சந்திரமுகி படத்தையே 800 நாள் ஓட்டலாமில்லையா! அது மாதிரி தான் இதுவும்.

இந்த நிலையில் மீண்டும் பிரபுதேவா மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் கதையை விஜய்யிடம் கொண்டு வந்தார். டைட்டில் சாங்கே “அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா” என பாடலோடு ஆரம்பித்த கதையைக் கேட்டு அசந்து போனார் விஜய். அதுதான் சூப்பர் டூப்பர் ஹிட் வில்லு. ஆனால் படம் வெளியான பின்புதான் அந்த அச்சம் என்பது மடமையடா என்ற வரிக்கே அர்த்தம் தெரிந்தது. அதாவது இந்தப் படத்தின் கதையைக் கேட்டு அஞ்சிய தயாரிப்பாளருக்காகத்தான் அந்தப் பாட்டு போடப்பட்டது என்று பின்னர் தான் நம்மாள் கணிக்க முடிந்தது.

படத்தின் வெற்றி ரேட்டிங்கைக் கேள்விப் பட்டு ஊர் ஊராக நகர்வலம் போன போது தான் திருச்சியிலே திருவிழா நடந்தது. குருவி படத்திலயாவது வேகமா பறந்து வந்து ஓடும் டிரைனில் ஏறுவார். அந்த சீனெல்லாம் சாதாரனம் என சொல்லும் அளவிற்கு வில்லு படத்தில் கப்பலில் இருந்து குதிப்பதும், கார்கள் கூட்டமாக வெடிக்கும் போது கூலாக நடந்து வருவதும் போன்ற பயங்கர காமெடி சீன்கள் வைக்கப்பட்டது. எப்படா மாட்டுவாரு விஜய்னு காத்திருக்கும் கண்மணிகள் இரவு பகலாகத் தேடி வில்லு படத்தை முழுமையாக ஒரிஜினல் பிரிண்டாக இணையத்தில் விட்டு இதய சாந்தி அடைந்தார்கள்.

இந்த நிலையில் தன் பழைய அடிகளையெல்லாம் துடைத்து தூரத்தூக்கிப் போட்டுவிட்டு வேட்டைக்காரனில் வேகமாக நடிக்க ஆரம்பித்தார் இளைய தளபதி. அவருக்காக மட்டுமின்றி வில்லுபடத்தால் மனநிலை பாதிக்கப்பட்ட அவரது ரசிகர்களை குத்து குத்துன்னு குத்தி குலுங்கி குலுங்கி ஆடவைக்க இரவு பகலாக உழைத்து வேட்ட வேட்ட வேட்ட வேட்ட வேட்டைக்காரன் பரம்பரைடா என்ற பாடலை போட்டு ராஜமுந்திரியில் இந்தக்காட்சியை சூட் செய்தார்கள்.. அவ்வளவு சீக்ரெட்டாக போட்ட பாட்டு இன்னும் ஆடியோ ரிலீஸே நடக்காத நிலையில் இணையத்தில் வெற்றி நடை போடுகிறது. யாரோ புண்ணியவான்கள் கடைசிவரைக் கூடவே குத்தவைத்திருந்து அவர்கள் அசந்த நேரத்தில் ஆட்டயப் போட்டுகிட்டு வந்து இணையத்திலே இணைத்து விட்டார்கள்.

பாவம் விஜய் என்னதான் செய்வார்.,எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது என்று எல்லோரிடமும் புல‌ம்பித் தீர்க்கிறாராம்.

என்னவோ. எப்பா விஜய் ரசிகர்களா! தலைவர் மீட்டிங் போடுறாருன்னு அழைப்பு வந்தா அவசரப்பட்டு போயிடாதியப்பா! முன்னயாவது டேய்னு கத்தினாரு. இந்த தடவை அடி பின்னிடுவாரு. எப்டியெல்லாம் இம்சையக் குடுக்குறாய்ங்கே!

கோட்டை விட்ட வேட்டைக்காரன்

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் படம் பாட்ஷா. அதை எப்படி சுமாராக கொடுப்பது என்று ரொம்ப யோசித்து வேட்டைக்காரன் ஆக்கியிருக்கிறார்கள். அப்படியே பாட்ஷா மாதிரி இருக்கு என்று சொல்லிவிடக்கூடாது என்றும் யோசித்திருக்கிறார்கள். அதனால் தெலுங்கில் ரவிதேஜா-அனுஷ்கா நடித்த விக்ரமாகுடு படத்தில் கொஞ்சம் சுட்டிருக்கிறார்கள். அபோகலிப்டா படத்தில் இருந்து கொஞ்சம்(என்கவுண்டரில் இருந்த தப்பிக்க அருவியில் குதிக்கும் காட்சி) சுட்டிருக்கிறார்கள். அப்புறம், வழக்கமாக மசாலாப்படங்களில் பார்த்து வரும் பல காட்சிகள்தான் திரைக்கதை. முப்பது வருசத்துக்கு முன்பு எடுத்த மாஸ் ஹீரோ அறிமுகமாகுற காட்சியை இன்னமும் எடுத்துக்கிட்டு இருக்குறாங்க. விஜய் அறிமுகமாகும் காட்சியும் அப்படித்தான். முதல் நாள் முதல் காட்சி. ஒரு பாட்டுக்கு கூட ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்கவில்லை. கரிகாலன் காலப்போல….என்று பாட்டு வருவதற்குள்ளாகவே தம்மடிக்க கிளம்பிட்டாங்னா. நான் அடிச்சா தாங்கமாட்ட..என்று விஜய் பாடுவது பொறுத்தமாக இல்லை. அவர் உடல் வாகுவிற்கு இந்த பாடலைப்பாடுவது தமாஸ் ரகம்ங்னா. இதுல வேறு அவரது மகன் அந்த பாட்டைப்பாடி கொஞ்சம் ஆடுகிறார். அவருக்கே பொறுத்தமா இல்லேன்னா இவருக்கு? பின்னனி இசையின் போது விஜய் ஆண்டனிக்கு என்ன நடந்திருக்கும்? மனுசர் ஏன் இப்படி சொதப்பியிக்கிறார். சண்டைக்காட்சியில் சோக கீதம் வாசிக்கிறார். உலகம் எப்பவும் பயப்படுவதற்கு தயாராக இருக்கு..பயமுறுத்தவன் இருந்துகிட்டுதான் இருப்பான் , இது அரசு முத்திரை..இதுல மை தடவி பேப்பர்ல குத்துங்க..மக்கள் வயித்துல அடிக்காதீங்க , என்று நச் வசனங்கள் இருக்கு. ஆனால் வெகு நீ………………ளமான வசனங்கள் தான் அதிகமாக இருக்கிறது. அந்த வசனத்திற்கெல்லாம் வாயை ஆ!என்று பிளக்கிறார்கள். வசனத்திற்கு மட்டுமல்ல நிறைய காட்சிகளுக்கும் கொட்டாவி பறக்கிறது. அனுஷ்கா கிளாமர்தான் வறண்ட பாலைவனத்தில் ஆறுதலான நீறூற்று. கொச்சின் ஹனிபா டயலாக் டெலிவரியில் கொஞ்சம் கலகலக்க வைக்கிறார். மனோபாலா சாஜிஷிண்டேவிடம் பேட்டி எடுத்து கலகலக்கவைக்கிறார். பள்ளித்தோழன் சத்யன் கொஞ்சம் கடிக்கிறார். கல்லூரித்தோழன் ஸ்ரீநாத் கடித்து குதறுகிறார். பல அட்டம்ப்ட்டுக்கு பிறகு +2வில் பாசாகி அப்புறம் காலேஜூக்கு விஜய் போகும் போதுதான் தியேட்டரே கலகலக்கிறது. ஆனால் கதைப்படி இது சீரியஸான காட்சி. பாட்ஷாவில் ரஜினி ஆட்டோ ஓட்டுவது போல் இதிலும் ஆட்டோ ஓட்டுகிறார் விஜய். ரஜினி ஆட்டோ ஓட்டி தங்கைகள், தம்பியை படிக்க வைப்பார். இதிலிருந்து வித்தியாசம் காட்டனுமே. அதற்காகத்தான் விஜய் ஆட்டோ ஓட்டி அந்த வருமானத்தில் தானே படிக்கிறார். பாட்ஷா படத்தில் ஏ பாட்ஷா பாரு பாட்ஷா பாரு பாடலுக்கு படிக்கட்டுகளில் இருந்து ஸ்டைலாக இறங்குவார் ரஜினி. காரில் ஒரு ஓரமாக ஸ்டைலாக அமர்ந்து சாலையை லுக் விடுவார். இதிலிருந்து வித்தியாசம் காட்டனுமே. அதனால்தான் புலி உறுமுது புலி உறுமுது பாடலுக்கு படிக்கட்டுகளில் ஸ்டைலாக ஏறுகிறார் விஜய். காரில் நடுவில் அமர்ந்து லுக் விடுகிறார். போலீஸ் அதிகார் ஷாயாஜிஷிண்டே, வில்லன் ஜிந்தா கலக்கியிருக்கிறார்கள். தன் சின்ன வீட்டை ஜிந்தாவின் மகன் அபகரித்துவிட அதுவரை ஜிந்தாவுக்கு ஜால்ரா அடித்தவர் விஜய் பக்கம் வந்துவிடுகிறார். ஏகப்பட்ட ரவுடிகள், ஏகப்பட்ட அடிதடிகள் இருந்தாலும் அரிவாள், ரத்தம் இல்லாதது ஆறுதல் (இருக்கு ஆனா இல்ல). சத்யனை கொன்று அட்டைப்பெட்டிக்குள் வைத்து அனுப்பினாலும் அவ்வளவாக நெஞ்சை பிசையவில்லை. நேர்மையான போலீஸ் அதிகாரி தேவராஜ் மாதிரி தானும் ஆகவேண்டும் என்று லட்சியம் வளர்க்கிறார் விஜய். தேவராஜ் எப்படியெல்லாம் உயர் அதிகார் ஆனாரோ அதே மாதிரி தானும் வரவேண்டும் என்று துடிக்கிறார் விஜய். அவர் மாதிரி ஆகும் வரை பொறுத்திருக்காமல் நல்ல விசயங்களை அங்கங்கே தட்டிக்கேட்கிறார். ரவுடிகளை என்கவுண்டரில் போட்டுத்தள்ளும் தேவராஜ் குடும்பத்தை அவரின் கண்ணெதிரிலேயே எரித்துவிடுகிறார்கள். இத்தீவிபத்தில் தேவராஜின் கண்பார்வையும் போய்விடுகிறது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார். அதனால் சென்னையில் வழக்கம் போல் ரவுடியிசம் தலைதூக்கிறது. அதை தட்டி தரைமட்டமாக்கும் விஜய்க்கு எனக்கொரு மகன் இருந்தால் என் பதவி அவனுக்கு கிடைக்கும். உன்னை என் மகனாக நினைக்கிறேன். நீ இனிமேல் பதவியில் இருந்துகொண்டு தைரியமாக தட்டிக்கேள் என்று விஜய்க்கு பதவி கிடைக்க செய்கிறார் தேவராஜ்.க்ளைமாக்ஸ். பால் அபிஷேகம், சரவெடி, குதிரையில் ஊர்வலம், கரகாட்டம், கச்சேரி என்று தியேட்டருக்கு முன்பு அமர்க்களப்படுத்திய ரசிகர்கள் தியேட்டருக்குள் ஒரு சில (இடங்களைத் தவிர) கடைசி வரை கப்சிப் என்று இருந்தார்கள். கொட்டாவியின் அடுத்தகட்டத்துக்கு போயிருப்பார்கள் போலிருக்கிறது. அரசியல் பிரவேச நேரத்தில் அதிரடியாய் வந்து ரசிகர்களை உசுப்பேத்த வேண்டிய விஜய், ஏன் இப்படி சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றுக்கினார். இவனுக்கு எதுக்கு மரியாதை……..

வேட்டைக்காரனைக் கேட்டுத்தான் பாப்போமேன்னு கேட்டேன். நல்லா இருந்துச்சோ இல்லையோ, நல்லா நேரம்போச்சு…

1)

குஸ்து ஆலமாக்கி மிஸ்மாத்தா சூமிக்காஸா ஸூ (உண்மையிலேயே இப்படித்தான் ஆரம்பிச்சது)

ஏலேலம்மோ….. (டம்க்கு டக்கு டம்க்கு டக்கு… )

என் உச்சி மண்டேல சுர்ருங்குதே

உன்ன நா பாக்கேல கிர்ருங்குதே

கிட்ட நீ வந்தாலே விர்ருங்குதே

ட்டர்ருங்குதே….

கைதொடும் தூரம் காச்ச வட

சக்கரையால செஞ்ச வட

என் பசி தீக்க வந்தவளே (உண்மையிலேயே வடன்னு சொல்றாங்களா இல்ல வளேன்னு சொல்றாங்களான்னு தெரியல, 10 தடவ கேட்டுட்டேன்)

சுந்தரி…யே….

தாவணி தாண்டி பாத்தவனே (நல்ல வேளை, கவிஞர் தூக்கின்னு எழுதல)

கண்ணால என்ன சாச்சவனே

ராத்திரி தூக்கம் கெடுத்தவனே

தந்திர..னே…

இப்படியே டமுக்கு டப்பா டமுக்கு டப்பானு நல்லா உள்ள வாங்கி சைடுல வுட்டு பின்னாடி வெளிய எடுத்து, குத்து குத்துன்னு குத்தியிருக்காங்க. டான்சுக்குன்னே போட்ட பாட்டா இருக்கும்.

இதுல வர்ற குத்து ஏற்கனவே கேட்ட மாதிரியே இருக்கு, என்ன பாட்டுன்னுதான் ஞாபகத்துக்கே வர மாட்டேங்குது.

2)

லமன்க்க்கிட்டுது லாமுமச்சா

என்ன ரஸ்ஸப்பானில ரஸ்மியத்தான்

பிரேன்னு சீக்குல ஷோமியல்லவ்

நன நானன்ன நானன்ன நானன….. அத்தானே அத்தானே…..

(சத்தியமா இதுவும் இப்படித்தான் ஆரம்பிச்சது…)

ஆ: கரிகாலன் காலப்போல கருத்துருக்குது கொழலு

பெ: கொழலில்ல கொழலில்ல தாஜுமஹால் நெழலு

ஆ: சேவலோட கொண்டப்போல செவந்திருக்குது உதடு

பெ: உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு…

ஹீரோ ஏதாவது சொல்ல, ஹீரோயின் அது இல்ல இதுன்னு கடைசி வரை சொல்லிட்டே இருக்காங்க. நல்லா இருக்கு. கிராமத்து இசை, தவில விட்டு தட்டிருக்காங்க, ட்க்ர்ர்ர், வ்ர்ர்ர்ர்ர்ர்யூம், ச்சல் ச்சல் சத்தமெல்லாம் கேட்டுட்டே இருக்கு. பாட்டக் கேக்கும்போது, அப்படியே கிராமத்து வயல்வெளியும், பேக்குரவுண்டுல சேல கட்டுன பொம்பளங்களும், வேட்டி கட்டின ஆம்பளங்களும் ஆடுறது, அப்றம் வைக்கோல், ஆடு, மாடு, கெழவி எல்லாம் மனசுல அப்படியே ஓடுச்சு.

3)

லைட்டா மீசிக் ஸ்டார்ட் ஆகுது, கூடவே…ஹேய்…. ஹோய்… சத்தம்.

ஆரம்பிக்கும்போதே தெரிஞ்சு போச்சு, இதான் இண்ட்ரோ சாங்கா இருக்கும்.

நா அடிச்சா தாங்க மாட்ட

நாலு மாசம் தூங்க மாட்ட

மோதிப்பாரு வீடு போயி

சேர மாட்ட…

(கன்பார்ம்)… அப்படியே போச்சு, இடையில ஒரு சிங்கம் வேற கொட்டாவி வுடுற சவுண்டு, லெப்டுல இருந்து ரைட்டுக்கு பாயுது…

.

.

.

வாழு வாழு, வாழ விடு

வாழும்போதே, வானைத் தொடு

வம்பு பண்ணா, வாளை எடு

வணங்கி நின்னா, தோளக் கொடு.

(அட நல்லாத்தான் இருக்கு)

கடைசியில ஒரு சின்ன பையன் வாய்ஸும் வருது. சின்னப் பசங்க படம்னு சொல்ல வாய்ப்பிருக்கு.

குத்துங்கடா குத்து

எங்கூட சேந்து குத்து….(நல்ல குத்துதான்)

4)

ஸ்ஸ்ஸூம்

க்கிய்யா (அப்டின்னு ஒரு வாய்ஸ், அப்றம் ஒரு மீசிக்..)

காலகீ மூவிய இப் ஹாமச் யூஹாவ்

காஸ் பெண்டியா போ கிம்மீய மாமு

வங்குபாரு ஜஸ் லுக்கிமீ ஸ்னீக்கர்ஸ்

மா கிரிடிட் கார்ட் ஹேவ் ரீல்லி கூல் ஃபீச்சர்ஸ்

(மறுபடியுமா…? திரும்ப ஒரு குத்து குத்தப் போறாங்களோன்னே கேட்டேன்)

ஒரு சின்னத் தாமரை

என் கண்ணில் பூத்ததே

அதன் மின்னல் வார்த்தைகள்

என் உள்ளம் தேடி தைக்கின்றதே…

(அடங்… மெலோடியா? ஏனோ தெரியல, இது கேக்கும்போது ’இருபது கோடி நிலவுகள் கூடி’ பாட்டு ஞாபகத்துக்கு வருது)

இதை உண்மை என்பதா

இல்லை பொய்தான் என்பதா

என் தேகம் முழுவதும்

ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே…

நல்லாத்தான் எழுதியிருக்காங்க. காதல் பாட்டுன்னாலே வரிகள்லாம் சும்மா செதுக்கி வச்சிடுறாங்க. கண்டிப்பா காதலர்கள் கொஞ்ச நாளைக்கு இதத்தான் முனுமுனுப்பாங்க.

5)

ஸம்பரபர ஸிப்பட்டே ஸித்திஸ் ஸலபல கண்டா

லிம்ம ஸொப்பன ஸிந்தா ஹம்சா ஆலல கண்டா

ஹிப்பி ஸாலல கும்பா கப்பி ஸாலல கட்டே

ஓம் ஷாந்தி ஷாந்தி கீ…

(உண்மையிலேயே முடியல)

டன் டகெட டண்டண்டே டன் டகுட டன்

டன் டகெட டண்டண்டே டன் டகுட டன் (அய்யய்யோ இன்னொரு இண்ட்ரோவா)

புலி உறுமுது புலி உறுமுது

இடி இடிக்கிது இடி இடிக்கிது

கொடி பறக்குது கொடி பறக்குது

வேட்டக்காரன் வர்றதப் பாத்து

(இதாவது பரவாயில்ல)

கொல நடுங்குது கொல நடுங்குது

துடி துடிக்கிது துடி துடிக்கிது

நெல கொலையிது நெல கொலையிது

வேட்டக்காரன் வர்றதப் பாத்து

(இதக் கேட்டவொடனேதான் சிரிப்பு , படம் நல்லா இல்லன்னா இந்த பாராவ மட்டும் எடுத்த்டு விமர்சனமா போட்டுறலாம், இதோட விட்டாங்களா..)

நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு

ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு

வர்றாம்பாரு வேட்டக்காரன்.

(இப்படி எடுத்துக்குடுத்துட்டே இருந்தா எப்டிங்னா?)

(நடுவுல ஒரு சாம்பில்)

போடு அடியப் போடு

போடு அடியப் போடு

ஆ: டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டக்கருனா

கோரஸ்: டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டக்கருனா

(போதுமா, இதுவும் செம குத்துதான். இளைய தளபதி எப்பல்லாம் நடக்குறாரோ இது பின்னாடி பாடும்னு எதிர்பாக்கலாம்)

ஒரு இண்ட்ரோ, ஒரு பிஜிஎம், ஒரு மெலோடி, ஒரு வில்லேஜ் அப்றம் ஒன்னு டான்ஸ்க்கு. பாட்டுக்களே செம மசாலாவா இருக்கு. கேக்கலாம்.

கொய்யாலே அவன் திருந்தவே மாட்டானா???????????

ஏம்பா யாரும் கமெண்ட்ஸ் போட மாட்டீங்களா ??? நான் கோபமா கெளம்பறேன்

2 thoughts on “வேட்டைக்காரன் ***SPECIAL***

  1. Vijay is AVATAR in tamil film Industry,

    Kulandhaigale payapadra alavukku padam terrora irukula………

    Ivaru copy adika mattar aduchuta avala than, inoru vettaikaran thaan….

  2. hi na sura la thalapathy innamum super ah comedy painne erukaru plz watch SURA SOON………. sura la vijay introduction semmmma super na….. ainnanu thriyanum aasai ah eruka ……

    NADDU KADAAL (SEA) ERINTHU SURA MARRIE PARINTHU VARUVAN……. NA

Leave a comment